போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு? 11 புதிய மேம்பாலங்கள் - கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

பெங்களூருவில் ரூ.13,262 கோடி மதிப்பீட்டில் 11 மேம்பாலங்கள் அமைக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு? 11 புதிய மேம்பாலங்கள் - கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!
Published on

பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.13,262 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அமைக்க கர்நாடக அமைச்சரவை நேற்று (ஏப்.17) ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுமார் 75.60 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. 11 தாழ்வாரங்களில் 9 பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையிலும், மீதமுள்ள 2 'பில்ட்-ஆப்பரேட்-டிரான்ஸ்பர்' (BOT) முறையிலும் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை பெங்களூரு ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற சிறப்பு அமைப்பு செயல்படுத்த உள்ளது. மேலும் இத்திட்டம் பெங்களூருவின் ஐந்து மாநகராட்சி மண்டலங்களையும் உள்ளடக்கி, பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று அம்மாநில சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், விரைவில் பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com