போதைப்பொருள் கடத்திய நர்சிங் மாணவி - மடக்கிப் பிடித்த போலீசார்

காரில் எம்டி.எம்.ஏ. போதைப்பொருள் மறைத்து கடத்துவது தெரிய வந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்திய நர்சிங் மாணவி - மடக்கிப் பிடித்த போலீசார்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக புகார்கள் உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமா நிலங்களில் இருந்தும் இங்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கேரள மாநில போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொச்சி அருகே உள்ள திருப்பணித்துறையில் வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தும்படி கூறினர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றதையடுத்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

அந்தக் காரில் ஒரு இளம்பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் எம்டி.எம்.ஏ. போதைப்பொருள் மறைத்து கடத்துவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அந்தக் காரில் வந்த பெண் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் எட்டுமானூர் அமீர் மஜித் மற்றும் சங்கனாசேரி வர்ஷா என தெரியவந்தது. இதில் வர்ஷா, பெங்களூரூவில் நர்சிங் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்கிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com