

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகாவில் 3 மாடி கட்டிடத்தில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2-வது, 3-வது மாடியில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. கல்வி நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.