டெல்லி, மும்பையை தாக்க திட்டம்: ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய 9 பேர் கைது

கைதானவர்களிடம் இருந்து வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
police
Published on

டெல்லி, மும்பையில் நடத்தப்பட இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. ஐஎஸ்ஐ அமைப்பு மற்றும் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில், டெல்லி மற்றும் மும்பையில் முக்கிய இடங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்ட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் அணுசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்டவை அவர்களது பட்டியலில் இடம்பெற்றிருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

தாவூத் இப்ராகிம் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவன் என்பதும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com