49 வருட ரூ. 7.65 வழிப்பறி வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

1977-ல் அடையாளம் தெரியாத நபர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை.
49 வருட ரூ. 7.65 வழிப்பறி வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ரூபாய் 65 பைசாவை வழிப்பறி செய்ததாக 50 வருடத்துக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை மசாகோன் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. புகார்தாரர் உயிரோடு இருந்தால் அரசு தரப்பில் ரூ.7.65-ஐ வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

1977-ல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் 7 ரூபாய் 65 பைசாவை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடியும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com