ஜம்மு காஷ்மீரில் சோகம்: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

கனரக இயந்திரங்கள் மூலம் பனிப்பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் சோகம்: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
Published on

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் சோஜிலா கணவாயில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்தப் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். பயணிகள் வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கின.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் பனியை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனரக இயந்திரங்கள் மூலம் பனிப்பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com