சிறுவனின் தவறுக்கு லியாண்டர் பயசின் நகைச்சுவை பதில்

6 வயது சிறுவன் தனது பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெயரை பொருத்துக பிரிவில் லியாண்டர் பயசை தவறுதலாக நடன கலைஞர் என பொருத்தி இருந்தார். பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் எனவும் தவறாக குறிப்பிட்டிருந்தான்.
சிறுவனின் தவறுக்கு லியாண்டர் பயசின் நகைச்சுவை பதில்
Published on

டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயசை பற்றி பெரும்பாலானோருக்கு அறிமுகம் தேவை இல்லை. உலக அளவில் பிரபலம் ஆனவர். ஆனால், அவரை பற்றி அறியாத 6 வயது சிறுவன் தனது பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெயரை பொருத்துக பிரிவில் லியாண்டர் பயசை தவறுதலாக நடன கலைஞர் என பொருத்தி இருந்தார்.

இந்த படத்தை பிருத்வி என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிட்டு எதிர்திசையில் அவர்களின் தொழில்களுக்கு பொருத்த வேண்டும் என்ற பிரிவில் அந்த சிறுவன், லியாண்டர் பயசை தவறாக நடன கலைஞர் என பொருத்தி இருந்த காட்சி உள்ளது. அதே நேரத்தில் பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் எனவும் தவறாக குறிப்பிட்டிருந்தான்.

இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அதைப்பார்த்த லியாண்டர் பயஸ், நகைச்சுவையாக பதில் அளித்து பதிவிட்டிருந்தார். அதாவது, சல்மான்கானின் நடன வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில் சல்மான்கான் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை பொருத்தி, தான் நடனம் ஆடுவது போன்று காட்சி இருந்தது. அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com