12 மாநிலங்களில் SIR பணி நிறைவு: 5.18 கோடி பெயர்கள் நீக்கம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்ற SIR மூலம் 5.18 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
12 மாநிலங்களில் SIR பணி நிறைவு: 5.18 கோடி பெயர்கள் நீக்கம்
Published on

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டாக பீகார் மாநிலத்தில் SIR பணியை மேற்கொண்டது.

2-வது கட்டமாக தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, புதுச்சேரி, அந்தமான், லட்சதீவு, குஜராத், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் SIR பணியை மேற்கொண்டது.

தற்போது இந்த பணி முழுமையாக நிறைவடைந்ததுள்ளது. இந்த SIR பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் 45.81 கோடி பேர் இடம் பெற்றுள்ளது. 5.18 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளது. இதில் முந்தைய பட்டியலில் இருந்து 10.2 சதவீதம் ஆகும்.

66,88,636 இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டளள்து. உத்தர பிரதேசத்தில் மட்டும் 25.47 லட்சம் பெயர் நீக்கப்பட்டள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து சுமார் 24.16 பெயர் நீக்கப்பட்டுள்ளது.

3-வது கட்ட பணி 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் நடைபெற இருக்கிறது. இங்கு 40 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஐந்து மாநில தேர்தல் நிறைவடைந்த பின்னர் 3-ம் கட்ட பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com