கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5048 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5048 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
Published on

பெங்களூரு:

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 4748 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 ஆயிரத்து 48 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com