ஆந்திராவில் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி
Published on: 

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், கொவ்வூருவை சேர்ந்தவர்கள் சத்தியவதி (வயது 60), கிருஷ்ணவேணி (35), செட்டம்மா (45), செல்லூர் அன்னவரம் (45). கூலி தொழிலாளர்களான இவர்கள் இன்று காலை வேலைக்குப் புறப்பட்டனர்.

கொவ்வூர் மேம்பாலத்தை பெண் தொழிலாளர்கள் கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி தொழிலாளர்கள் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com