

தெற்கு டெல்லியின் சாகேத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சைதுல் அஜாப் பகுதியில் நேற்று இரவு 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திலிருந்து 10 பேரை பத்திரமாக மீட்டனர்.
இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, முதல் மந்திரி ரேகா குப்தா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.