திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற கோவில் பூசாரி

அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற கோவில் பூசாரி
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் சாய் கிருஷ்ணா ஷரூர்நகர் பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.

நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்சராவுக்கும் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில், அப்சரா கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர், சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தலால் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

மேலும், அப்சரா சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான்பல்லி பகுதியில் உள்ள பசு கொட்டகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு, திருமணம் குறித்து அப்சரா பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை அடித்து தாக்கியுள்ளார். பின்னர், அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.

தொடர்ந்து, சாய் கிருஷ்ணா அப்சராவை காணவில்லை என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் அப்சராவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com