பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

சிறுவன் குர்கரன் சிங் சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியிருந்தான்
பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
Published on

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்தான்.

ஹோஷியார்பூர்-தசூயா சாலையிலுள்ள பிக்கோவால் அருகே அமைந்துள்ள சக் சமனா கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சிறுவன் குர்கரன் சிங் சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியிருந்தான்

பல்வேறு மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் 9 மணி நேர மீட்பு நடவடிக்கைக்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com