அரியானாவில் கிணறு சுத்தம் செய்தபோது விஷ வாயு சுவாசித்து 3 பேர் பலி

பலியானவர்கள் ஜெய்பால், நரேந்திரன் மற்றும் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.விஷ வாயு தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானாவில் கிணறு சுத்தம் செய்தபோது விஷ வாயு சுவாசித்து 3 பேர் பலி
Published on

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள சஹர்வா கிராமத்தில் கிணற்றை சுத்தம் செய்தபோது நச்சு வாயுவை சுவாசித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கிணற்றுக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். பலியானவர்கள் ஜெய்பால், நரேந்திரன் மற்றும் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றை சுத்தம் செய்ய 4 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் முதலில் ஜெய்பாலும், நரேந்திரனும் கிணற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். இவர்கள் கிணற்றுக்குள் ஏற்பட்ட நச்சு வாயுவை சுவாசித்து சுயநினைவை இழந்துள்ளனர். பின்னர், சுரேஷூம், விக்ரமும் உள்ளே இறங்கினர். இதில் சுரேஷூம் விஷ வாயுவை சுவாசித்து மயங்கினார். இதனால், விக்ரம் உடனடியாக கிணற்றில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com