மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது

கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
Published on

மேற்கு வங்காளத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) ஓய்கிறது. இதனிடையே அங்கு ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இது தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று விசாரணை நடந்து வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 இடங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 93.2 சதவீத வாக்குகள் பதிவானது.

முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

கோடை வெயிலை விட அதிகமாக அனல் வீசும் இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இதனால் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com