சல்மான்கானை போன்று தோற்றம் கொண்டவர் லக்னோவில் கைது

லக்னோ தாகூர்கஞ்ச் போலீசார் 151வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசாம் அன்சாரியை கைது செய்துள்ளனர்.
சல்மான் கான் போன்று தோற்றம் கொண்ட அசாம் அன்சாரி
சல்மான் கான் போன்று தோற்றம் கொண்ட அசாம் அன்சாரி
Published on

லக்னோ:

அசாம் அன்சாரி என்பவர் இணையத்தில் மிகவும் பிரபலமானவர். இவர் லக்னோவில் உள்ள வரலாற்று சாலைகள் மற்றும் நினைவு சின்னங்களின் பின்னணியில் இருந்து பல வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுபவர். இவருக்கு யூ-டியூபில் 1.67 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாகிராமில் 75 ஆயிரத்திற்கு மேல் ஃபாலோவர்களும் உள்ளனர்.

இந்தி நடிகர் சல்மான்கானை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட அசாம் அன்சாரி, நேற்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக வரலாற்று சிறப்புமிக்க கடிகார கோபுரத்தில் நின்று புகைப்பிடித்தபடி வீடியோ எடுத்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் சிலர் அசாம் அன்சாரி மீது புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில், லக்னோ தாகூர்கஞ்ச் போலீசார்  151வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசாம் அன்சாரியை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com