கர்ப்பிணிகள் குறித்த புதிய விதிமுறை - கடும் எதிர்ப்பால் ரத்து செய்தது எஸ்பிஐ

3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணியில் சேர தகுதியற்றவர்கள் என்ற எஸ்.பி.ஐ.யின் சுற்றறிக்கைக்கு எதிராக மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
எஸ்பிஐ
எஸ்பிஐ
Published on

புதுடெல்லி:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ வங்கி ,  3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில் சேர்வதற்கு தற்காலிக தகுதியற்றவர்கள் என சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எஸ்.பி.ஐ வங்கியின் இந்த உத்தரவுக்கு டெல்லி மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது என வெளியிட்ட சுற்றறிக்கையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரத்து செய்தது.

இதுதொடர்பாக, எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளை தொடரவும் முடிவு செய்துள்ளது என கூறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com