search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் 54.58 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

    இந்தியாவில் 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்ட 19.68 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 54.58 கோடி (54,58,57,108) பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18 வயது முதல் 44 வயதுடையோருக்கு முதல் தவணையாக 19,68,99,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,54,10,416 பேருக்கு 2-வது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

    45 வயது முதல் 59 வயதுடையோருக்கு முதல் தவணையான 11,73,89,912 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4,57,91,230 பேருக்கு 2-வது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

    60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 8,11,53,834 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4,03,08,964 பேருக்கு 2-வது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,03,50,751 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81,00,615 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    முன்கள பணியாளர்கள் 1,82,78,787 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,221,73,133 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×