search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசவராஜ் பொம்மை
    X
    பசவராஜ் பொம்மை

    அனைவரையும் திருப்திப்படுத்துவது சவாலானது: பசவராஜ் பொம்மை பேட்டி

    வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பது தான் எனது முதல் பணி. அதற்காக நான் கார்வாருக்கு செல்கிறேன்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு பெங்களூருவில் எடியூரப்பாவை அவரது காவேரி இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மந்திரி பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து அழுத்தம் வருவது இயல்பானது தான். மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, அனைவரையும் திருப்திப்படுத்துவது சவாலானது. எல்லாவற்றையும் நிர்வகிக்க வேண்டும். வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பது தான் எனது முதல் பணி. அதற்காக நான் கார்வாருக்கு செல்கிறேன். பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார்.

    நல்லாட்சி தாருங்கள், அவ்வாறு நல்லாட்சி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளேன். அதே நேரத்தில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள், எம்.பி.க்களை சந்தித்து, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கர்நாடக திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் பெறுவது குறித்து ஆலோசிக்க இருக்கிறேன்.

    நடப்பு ஆண்டில் ரூ.18 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.12 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டை வழங்கியது. கடன் வடிவத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    Next Story
    ×