ஆந்திராவில் 16 ஒட்டகங்கள் கடத்தல்: 2 பேர் கைது

போலீசார் 16 ஓட்டங்களையும் பறிமுதல் செய்தனர்.விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
ஆந்திராவில் 16 ஒட்டகங்கள் கடத்தல்: 2 பேர் கைது
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம்,திருப்பதி அடுத்த அன்னமய்யா மாவட்டம், சம்பப்பள்ளிக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து இறைச்சிக்காக 16 ஒட்டகங்கள் கடத்தி வரப்பட்டன.

இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 16 ஓட்டங்களையும் பறிமுதல் செய்தனர். ஒட்டகங்கள் அங்குள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஒட்டகங்களை கடத்தி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி சங்கர் லால் மற்றும் ஒட்டகங்களை வாங்கிய சையத் பாபுஜி ஆகியோர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் ஒட்டகம் இருப்பதால் யாரும் ஒட்டகங்களை இறைச்சிகாக விற்கவோ வாங்குவோ கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com