விராட் கோலி தேர்வு குறித்த வெங்சர்காரின் புகார் முற்றிலும் தவறானது - ஸ்ரீனிவாசன்

விராட் கோலி தேர்வு குறித்து வெங்சர்கார் கூறியிருந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
விராட் கோலி தேர்வு குறித்த வெங்சர்காரின் புகார் முற்றிலும் தவறானது - ஸ்ரீனிவாசன்
Published on

அப்போது ‘‘2008-ம் ஆண்டு விராட் கோலியை இந்திய அணியில் அறிமுகப்படுத்தியதற்காக எனது பதவியை இழக்க நேரிட்டது. விராட் கோலிக்குப் பதிலாக பத்ரிநாத்தை அணியில் சேர்க்க வேண்டும் என்று அப்போது, பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார்’’ என்று கூறியிருந்தார்.

திலிப் வெங்சர்காரின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘வெங்சர்காரின் குற்றச்சாட்டை வைத்து பார்க்கையில், அவருடைய நோக்கம் என்ன?. அது எதுவாக இருந்தாலும், அது உண்மையில்லை. முற்றிலும் அடிப்படையில்லாத தவறான நோக்கம். ஒரு கிரிக்கெட்டர் இதுபோன்று பேசுவது நல்லதல்ல. அவர் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதற்காக நான் உடந்தையாக இருந்தேன் என்று கூறியது உண்மையல்ல. தற்போது இந்த விவகாரத்தை கூறுவதற்கு என்ன காரணம். நான் வீரர்கள் தேர்வில் இடையூறு செய்யது கிடையாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com