ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மின் கம்பத்தில் மோதி பலி

ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மின் கம்பத்தில் மோதி பலியானார்கள்.
ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மின் கம்பத்தில் மோதி பலி
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி வேலூரை சேர்ந்தவர்கள் கார்த்திக். (வயது 37). அவரது உறவினர் கருப்புசாமி (65). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கள்ளிமந்தையம் பகுதியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இடையகோட்டை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி தாறுமாறாக சென்றது. அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மோட்டார் சைக்கிள் பிடித்தார். ஆனால் அது எதிர்பாராதவிதமாக அந்த பகுதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com