

போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலம், தார் மாவட்ட தலைநகரான தார் நகரில் இருந்து இன்று பட்நாவர் பகுதியை நோக்கி சென்ற ஒரு பஸ், பட்நாவர்-பெட்லவாட் சாலையில் சய்யான் கிராமத்தின் அருகே வந்த எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள்மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராம்(30), அஞ்சு தேவி(28), சந்தீப்(14) முஸ்கான்(8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.