ஊராட்சி தலைவர் அவமதிப்பு- முக ஸ்டாலின் கண்டனம்

தெற்குத்திட்ட ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி அவமரியாதை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் முகஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தில், 

தெற்குத்திட்ட ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஊராட்சி மன்றத்த தலைவர் தரையில் அமர்த்திருக்கும் அந்த படம் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு. சமத்துவம், ஜனநாயகத்திற்கும் எதிரான இழிசெயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com