லோக் ஆயுக்தாவில் தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி ஏற்படுத்தியது இதற்காகவா? - ஸ்டாலின்

லோக் ஆயுக்தா மசோதாவில் அரசு ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது என்ற தனிப்பிரிவை சேர்த்தன் பின்னணி தற்போது தெளிவாகிறது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். #IncomeTaxRaid #MKStalin
லோக் ஆயுக்தாவில் தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி ஏற்படுத்தியது இதற்காகவா? - ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனம் ஆகியவற்றில் சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு ஊழல் செய்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நெடுஞ்சாலை திட்டங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அ.தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டும், அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி

தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு,வலிமைமிக்க லோக் ஆயுக்தா அமைப்பில் “காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது”என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது

கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய வருமான வரித்துறை  வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com