நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சி: மத்திய மந்திரி நட்டாவை சந்தித்த விஜயபாஸ்கர் பேட்டி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, டெல்லியில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சி: மத்திய மந்திரி நட்டாவை சந்தித்த விஜயபாஸ்கர் பேட்டி
Published on

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்ட 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்ட நகலும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

X

Maalai Malar
www.maalaimalar.com