பள்ளிகள் திறப்பது எப்போது?- தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா என்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com