ரேசன் பொருள் வினியோகம் பற்றி விரைவில் புதிய அறிவிப்பு- அமைச்சர் தகவல்

ரே‌சன் பொருள் வினியோகம் பற்றிய நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ
Published on

சட்டசபை கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் புதிய நியாயவிலை கடைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

தமிழக அரசு மக்கள் நலன் கருதி நியாயவிலை கடை எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 23 ஆயிரத்து 486 முழு நேர ரே‌சன் கடைகளும், 9 ஆயிரத்து 478 பகுதி நேர கடைகளும் உள்ளன.

நகரும் ரேசன் கடைகளும் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி உறுப்பினர்கள் கேட்கும் இடங்களில் எல்லாம் முழு நேர அல்லது பகுதி நேர ரே‌சன் கடைகளை அமைத்து வருகிறோம். நகரும் ரேசன் கடைகளும் தேவையான இடங்களுக்கு சென்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com