புதுடெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு குதுப்மினார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரவி (25) என்ற இளைஞர், திடீரென, ஜஹாங்கிர்புரி செல்லும் மெட்ரோ ரெயில் முன்னர் பாய்ந்து விழுந்தார். உடனே, ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் மருத்துமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சமீப காலமாக மெட்ரோ ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com