காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருடன் மம்தா சந்திப்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினரை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.
பலியானோர் குடும்பத்தினருடன் மம்தா சந்திப்பு
பலியானோர் குடும்பத்தினருடன் மம்தா சந்திப்பு
Published on

கொல்கத்தா:

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த மூர்ஷிதாபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மூர்ஷிதாபாத் சென்றார், அங்கு ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com