ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி நேபாளத்தில் பிடிபட்டான்

விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சபீன்லால் சந்த் நேபாளத்தில் பிடிபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். #IOBBankRobbery #Sabinlal
ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி நேபாளத்தில் பிடிபட்டான்
Published on

சென்னை:

சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் லாக்கர்களை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுதொடர்பாக வங்கி செயல்படும் கட்டிடத்தின் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த சபின்லால் சந்த் தனது மகனுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சபின்லால் சந்த் நேபாளத்துக்கு தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சபீன்லால் சந்த் நேபாளத்தில் பிடிபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சென்னை ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கில் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான காவலாளி சபீன்லால் சந்த் நேபாளத்தில் பிடிபட்டான். அயல்நாட்டு பிரஜை என்பதால் சபீன்லால் சந்தை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிடிபட்ட சபீன்லால் சந்த் நேபாள போலீசாரிடம் ஒப்படைக்கபபட்டுள்ளான் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். #IOBBankRobbery #Sabinlal #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com