ஈரானில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்: பொதுமக்கள் கடும் பீதி

ஈரான் நாட்டின் கெர்மன் மாகாணத்தில் இன்று ரிக்டர் அளவில் 6.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரானில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்: பொதுமக்கள் கடும் பீதி
Published on

டெஹ்ரான்:

ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 57 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நில அதிர்வுகள் நிகழ்வதால் அங்குள்ள பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 530 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு சாலையில் தஞ்சமடைந்தவர்கள் குளிர் தாங்காமல் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது தான் தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com