ஓபிஎஸ் மகன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு- தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LSPolls #Thangatamilselvan
ஓபிஎஸ் மகன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு- தங்க தமிழ்ச்செல்வன் அறிவிப்பு
Published on

தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பரிசீலனை முடிவடைந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வேட்புமனு தாக்கலின் போது அளித்த சொத்து பட்டியலில் விஜயானந்த் நிறுவனத்தில் அவரும், அவரது சகோதரி கவிதாபானு, சகோதரர் ஜெயபிரதீப் ஆகியோர் இயக்குனர்களாக இருப்பதை மறைத்துள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் பெயரில் ரூ.24 லட்சம் மதிப்பிலான இடம் உள்ளதையும், இந்நிறுவனத்தின் சார்பில் ரூ.3.15 கோடி மதிப்பிலான காற்றாலை உள்ள தகவலையும் மறைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம்.

இதனை ஆதாரப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தேன். ஆனால் அதிகாரி என்ன காரணத்தாலோ மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளோம். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thangatamilselvan

X

Maalai Malar
www.maalaimalar.com