லாரி மோதி காவலாளி பலி: டிரைவர் கைது

லாரி மோதி காவலாளி பலி: டிரைவர் கைது

சாலையை கடந்து சென்ற காவலாளி சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

நாகமலை புதுக்கோட்டை:

மதுரை செக்கானூரணி அருகே உள்ள கே. புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மகன் சரவணன் (வயது 45). கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை 9 மணியளவில் அச்சம்பத்து அருகே 4 வழிச்சாலை பகுதியில் சரவணன் நடந்து சென்றார். அங்குள்ள கடைக்கு வந்து டீ குடித்து விட்டு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரசிங்கத்தைச் சேர்ந்த சரக்கு லாரி டிரைவர் இளையராஜாவை, நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com