கள்ளக்குறிச்சி தொகுதியில் கவுதமசிகாமணி வெற்றி

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் கவுதமசிகாமணி வெற்றி
Published on

விழுப்புரம்:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் 15,28,539 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,98,064 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் 3,21,794 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் 50 ஆயிரத்து 179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சர்பூதீன் 30 ஆயிரத்து 246 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கணேஷ் 14 ஆயிரத்து 587 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com