

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள கோட்டகச்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்(55). முருகையன் தரப்பினருக்கும்,
நாகப்பன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று 2 கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு
கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் முருகையன், மஞ்சுளா (40), சரண்ராஜ்(30), விக்னேஷ்(20), ஈஸ்வரி (30), மணியன்(45) ஆகிய 6 பேரும்
படுகாயம் அடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் முருகையன் மற்றும் நாகப்பன் ஆகியோர் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 2 கோஷ்டியையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகேந்திரன்(35), பார்த்தீபன்(30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.