கீழ்பென்னாத்தூரில் பஸ்-பைக் மோதல்: 2 பேர் பலி

கீழ்பென்னாத்தூரில் அரசு பஸ்- பைக் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை இவர் மகன் சிவக்குமார் (வயது 30) அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவர் மகன் ராஜகோபால் (வயது 25) இவர்கள் இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்கள்.

கீழ்பென்னாத்தூரில் இருந்து நேற்று இரவு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிகொண்டு சிவக்குமார் மற்றும் ராஜகோபால் இருவரும் சிறுநாத்தூருக்கு மோட்டார் சைக்களில் சென்று கொண்டு இருந்தனர். பழைய லட்சுமி அம்மாள் பள்ளி அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவக்குமாரும், ராஜகோபாலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் 2 பேரின் உடலையும் கைபற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com