சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க மசோதா- கேரள எம்பி இன்று தாக்கல் செய்கிறார்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை கேரளாவைச் சேர்ந்த எம்பி ஒருவர் இன்று பாராளுமன்றத்தல் கொண்டு வர உள்ளார்.
சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க மசோதா- கேரள எம்பி இன்று தாக்கல் செய்கிறார்
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த பாரம்பரிய வழக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. ஆனால், பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி போராடியதால், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com