

திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு எர்ணாகுளத்தில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்தில் மொத்தம் 58 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களை நேரடியாக அணுகி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம்.
நீட் தேர்வை எழுத செல்லும் மாணவர்களுக்காக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன என
தெரிவிக்கப்பட்டுள்ளது. #NEET #NEETStudents #Kerala