கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது பா.ஜனதா - குமாரசாமி கடும் தாக்கு

பா.ஜனதா கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது பா.ஜனதா - குமாரசாமி கடும் தாக்கு
Published on

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை. எனக்கு எதிராக எடியூரப்பா போட்ட வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.

தன் மீதான வழக்குகளை எடியூரப்பா எப்படி நீக்கிக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம். நான் முன்பு முதல்-மந்திரி பதவியை விட்டு செல்லும்போது, பி.எம்.டி.சி.யில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தேன். அதன் பிறகு அந்த துறைக்கு ஆர்.அசோக் மந்திரியாக வந்த பிறகு பி.எம்.டி.சி. நிறுவனத்தையே சீரழித்துவிட்டார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy

X

Maalai Malar
www.maalaimalar.com