கார்கில் போர் வெற்றி தினம் - பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினம் - பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து
Published on

டெல்லி:

1999ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, இன்று டுவிட்டர் மூலம் நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவு கூற வேண்டும் என்று ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 

மக்களின் பாதுகாப்புக்காகவும் நாட்டுக்காகவும் துணிச்சலுடன் போரிட்டவர்களை நினைவு கூறுங்கள் என்றும் மோடி கூறினார். இதைத்தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. நேற்றும் நாட்டின் பல இடங்களில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com