கர்நாடகா: 19 வயது ரவுடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

கர்நாடக மாநிலம், கலபுராகி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குக்கு இடையூறாக செயல்பட்ட 19 வயது வாலிபரை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்.
கர்நாடகா: 19 வயது ரவுடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம், கலபுராகி மாவட்டம், நன்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா(19). கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையை இவரை ரவுடிகள் பட்டியலில் இணைத்து போலீசார் தேடி வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பிரபல ரவுடி லக்‌ஷ்மிகாந்தன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும் இவரது பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நன்டூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு மல்லிகார்ஜுனா வந்துள்ளதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, மாவட்ட சூப்பிரண்ட் சசிகுமார் உத்தரவின் பேரில் அந்த வீட்டை போலீசார் இன்று சுற்றிவளைத்தனர்.

போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த மல்லிகார்ஜுனா ராவ் துப்பாக்கியால் சுட்டவாறு தப்பியோட முயன்றார். இதில் துணை சூப்பிரண்ட் உள்பட மூன்று போலீசார் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தனர். போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் மல்லிகார்ஜுனா ராவ் சுட்டுக் கொல்லப்பட்டான்.

X

Maalai Malar
www.maalaimalar.com