சூரியனை ஆராய்வதற்கு தயாராகும் இஸ்ரோ - அடுத்த ஆண்டு ’ஆதித்யா’ விண்கலம் ஏவ திட்டம்

சந்திரனை தொடர்ந்து சூரியனை நெருக்கமாக ஆராய்ச்சி செய்வதற்காக ’ஆதித்யா எல்-2’ என்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
கொரோனா  ‘பிளாஸ்மா’ கதிர்கள்
கொரோனா ‘பிளாஸ்மா’ கதிர்கள்
Published on

சந்திரயான்-2 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக ஏவி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அடுத்தக்கட்டமாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் முத்திரை பதிக்கவுள்ளது.

சுட்டெரிக்கும் தீக்கோளமான சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று அதன் வெளிவிட்டத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பரப்பளவில் அகன்று, விரிந்து கிடக்கும் வீரியமிக்க ’கொரோனா’ எனப்படும் ‘பிளாஸ்மா’ கதிர்களைப் பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்ய ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.

இதற்காக உருவாக்கப்படும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com