

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று கோவாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை எப்.சி. மற்றும் கோவா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் கோவா அணி சார்பில் கொரொமினாஸ், புருனோ, பெர்னாண்டஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால், மும்பை எப்.சி. அணியின் சார்பில் சாண்டொஸ் இரண்டு கோல்களும், எமானா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் மும்பை அணியின் பல்வந்த் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மும்பை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதையடுத்து, இந்த போட்டியில் மும்பை அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.