அதிநவீன போர் விமானத்தை பரிசோதித்தது ஈரான்

அமெரிக்காவின் கடும் பொருளாதார தடையையும் மீறி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானத்தை ஈரான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
அதிநவீன போர் விமானத்தை பரிசோதித்தது ஈரான்
Published on

டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

இதற்கிடையில், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஜனநாயக அரசை நிலைநிறுத்துவதற்காக ஈரான் அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் மீது ஈரான் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு முன்னர் கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற புரட்சிக்கு முன்னர் ரஷியா மற்றும் அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட போர் விமானங்களைதான் ஈரான் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய உலக நாடுகள் ஈரானுக்கு போர் ஆயுதங்களையும், விமானங்களையும் விற்க மறுத்து விட்டன. இந்த புறக்கணிப்புக்கு இடையில் ராணுவ பலத்தை அதிகரிக்க ஈரான் சபதம் ஏற்றது. தேவையான போராயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன் அதிநவீன போர் விமானங்களையும் தயாரிக்க கடந்த 2013-ம் ஆண்டில் திட்டம் தீட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com