

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கயானாவில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஆனது.
மழை நின்றபின் டாஸ் சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேஎல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் சாஹர் அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். தீபக் சாஹரும் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேஎல் ராகுல், 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ரிஷப் பந்த், 5. மணிஷ் பாண்டே, 6. குருணால் பாண்டியா, 7. வாஷிங்டன் சுந்தர், 8. தீபக் சாஹர், 9. புவனேஷ்வர் குமார், 10. ராகுல் சாஹர், 11. நவ்தீப் சைனி.