நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் படுகொலை

நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருட்டை தடுக்க முயன்றபோது கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் படுகொலை
Published on

ஆக்லாந்து:

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் வசித்து வந்தவர் அரிஷ்மா அர்ச்சனா சிங் (24). இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று வயது குழ்ந்தையுடன் வசித்து வந்தார். குழந்தைகளுக்கு பாடம் நடத்தி  வரும் இவர் தெற்கு பசிபிக் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில், தோழியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அர்ச்சனா நேற்று தனது குடும்பத்துடன் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அர்ச்சனா வீடு திரும்பினார்.

ஆனால், அர்ச்சனாவின் பெற்றோர் இரவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் ரத்தம் சிந்தி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது முகம் மற்றும் உடலில் படுகாயங்களுடன் அர்ச்சனா கொல்லப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அர்ச்சனா பெற்றோர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் அர்ச்சனா வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம்என சந்தேகிக்கிறோம். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com