தென்ஆப்பிரிக்கா தோல்வியில் இருந்து பாடம்- வெளிநாடு பயணத்தில் மாற்றம்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இந்தியா இழந்ததால், வெளிநாட்டு தொடருக்கான திட்டத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது. #BCCI #TeamIndia
தென்ஆப்பிரிக்கா தோல்வியில் இருந்து பாடம்- வெளிநாடு பயணத்தில் மாற்றம்
Published on

இந்த அணி சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தபோது, இதுகுறித்து யாரும் அதிக அளவில் பேசவில்லை. கடந்த ஜனவரி மாதம் இந்தியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. பின்னர் நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-1 எனவும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது.

இந்திய அணி தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்வதற்கு முன்பு வரை இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடியது. இதனால் தென்ஆப்பிரிக்காவில் தொடர் தொடங்குவதற்கு முன்பு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. மேலும் இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாடவில்லை.

இந்திய அணிக்கு போதிய கால அவகாசம் இல்லாததே டெஸ்ட் போட்டியில் தோல்வியடைய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியது. தென்ஆப்பிரிக்கா தொடரையடுத்து இந்தியா, முக்கியமான தொடராக கருதப்படும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது.

இந்த தொடரின்போது தென்ஆப்பிரிக்கா நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பிசிசிஐ விழிப்பாக உள்ளது. இதனால் இந்த தொடர்களின்போது இந்திய வீரர்கள் அங்குள்ள சூழ்நிலையைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் வகையில், டெஸ்ட் தொடருக்கு முன்னாள், ஒருநாள், டி20 தொடரை முதலில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பேசப்பட்டுள்ளதாக பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com