கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது - தேசத்துரோக வழக்குப்பதிவு

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 பேர் மீது போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு அவர்களை கைது செய்தனர்.
கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது - தேசத்துரோக வழக்குப்பதிவு
Published on

பர்கான்பூர்:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றதை மத்திய பிரதேச மாநிலம் பர்கான்பூரில் உள்ள மோகத் நகரில் சில இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து, 15 பேரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். கைதான அனைவரும் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 

X

Maalai Malar
www.maalaimalar.com