உலக ஆக்கி லீக் அரைஇறுதி தொடர்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

உலக ஆக்கி லீக் அரைஇறுதி தொடர்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

லண்டனில் நடைபெற்று வரும் உலக ஆக்கி லீக் தொடரில் 5 முதல் 8 இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on

லண்டன்:

உலக ஆக்கி லீக் அரைஇறுதி தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதி ஆட்டத்தில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 5 முதல் 8 இடத்துக்கான ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி இருந்தது. அதற்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 5 முதல் 8 இடத்துக்கான மற்றொரு ஆட்டத்தில் கனடா-சீனா அணிகள் மோதுகின்றன. இதனை அடுத்து நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் அர்ஜென்டினா-மலேசியாவும், 2-வது அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com